ஈரோடு: கைப்பேசி பறித்ததால் சகோதரிகள் மாயம்; பெற்றோர் புகார்

2பார்த்தது
ஈரோடு: கைப்பேசி பறித்ததால் சகோதரிகள் மாயம்; பெற்றோர் புகார்
வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சம்பூரணம்-தனபால் தம்பதியினரின் இரட்டையர்களான ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி (19) ஆகியோர், தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். கைப்பேசியில் அதிக நேரம் செலவிட்டதால், பெற்றோர் கண்டித்து கைப்பேசியை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்ற இருவரும்  காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.