ஈரோட்டில் 100 சதவீத தொழில் வரியை வரும் 31க்குள் வசூலிக்க வேண்டும்

80பார்த்தது
ஈரோட்டில் 100 சதவீத தொழில் வரியை வரும் 31க்குள் வசூலிக்க வேண்டும்
ஈரோடு மாநகராட்சியில் வரும் 31ம் தேதிக்குள், 100 சதவீத தொழில் வரியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கும், துணை ஆணையர் தனலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.ஈரோடு மாநகராட்சி கூட்டரங்களில், துணை ஆணையர் தனலட்சுமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில், மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.அப்போது துணை ஆணையர் தனலட்சுமி பேசியதாவது:ஈரோடு மாநகராட்சியில் வரும் 31ம் தேதிக்குள், வணிகர்களின் தொழில் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய உரிமம் வாங்க விண்ணப்பிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த, ஆய்வுப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். 

100 சதவீத தொழில் வரியை வரும் 31ம் தேதிக்குள் வசூலிக்க தீவிரமாக பணியாற்ற வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் வகையில், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தனலட்சுமி கூறினார்.
Job Suitcase

Jobs near you