அந்தியூர் அருகே ராசான்குளத்தைச் சேர்ந்த விவசாயி செங்கோட்டையன், 2009ல் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, இதுவரை இலவச மின் இணைப்பு வழங்கப்படாததால், நேற்று காலை அண்ணாமடுவு துணை மின் நிலைய அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையறிந்த உதவி செயற்பொறியாளர் அங்கப்பன், உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, விவசாயி போராட்டத்தை கைவிட்டு சென்றார்.