ஈரோடு மாவட்டம், குப்பாண்டாம்பாளையம் கிராமத்தின் குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் இருந்த சிரமத்தைப் போக்க, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் கோபிசெட்டிபாளையம் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ஆணையின்படி, ஏ.ஏ. 398 குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆதார் கைரேகை பதிவு மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமமின்றி வங்கிச் சேவைகளைப் பெற்று மகிழ்கின்றனர்.