ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான ஹோண்டா இருசக்கர வாகனத்தின் சைலன்சரில் இருந்த ஓட்டையைச் சரிசெய்ய வெல்டிங் கடைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வெல்டிங் பணியின்போது எதிர்பாராதவிதமாக வாகனம் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வாகனம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.