ஈரோட்டில் பயங்கரம்: முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை

3பார்த்தது
ஈரோட்டில் பயங்கரம்: முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை
ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் பூட்டிய கடை ஒன்றின் முன் உறங்க முயன்ற இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், மதுபோதையில் இருந்த பவுலோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளி பவுலோஸை கைது செய்தனர். கொல்லப்பட்ட நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி