ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே மக்கள் புதூர் பகுதி ஜெயராமன் தோட்டத்தில் அரசு அனுமதி இன்றி கிராவல் மண் அள்ளியதாக வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண் அள்ளிய லாரி ஓட்டுநர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.