பத்திரிக்கை துறை சிபா ஆதித்தனார் நினைவு நாள்

719பார்த்தது
பத்திரிக்கை துறை சிபா ஆதித்தனார் நினைவு நாள்
பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில், தமிழர் தந்தை சி. பா. ஆதித்தனாரின் 45வது நினைவு நாள் நிகழ்ச்சி, அந்தியூர் தலைமை அலுவலகத்தில் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை, சி. பா. ஆதித்தனாரின் புகழைப் பற்றி பேசினார். மாவட்ட செயலாளர் வாசுதேவன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி