அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது. குறிப்பாக வரட்டு பள்ளம் அணை நீர் பிடிப்பு பகுதியில் 35.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் வன குட்டைகளில் தண்ணீர் வந்துள்ளதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும், வனப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.