ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ. 1.25 லட்சம், கொங்கு காளை மாடு ஜோடி ரூ. 1 லட்சம், நாட்டு பசு மாடு ரூ. 50 ஆயிரம் என பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் ரூ. 1.5 கோடிக்கு விற்பனை நடைபெற்ற இந்த சந்தையில், ஈரோடு, திருப்பூர், கோவை, சக்தி, பவானி, மேட்டூர் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர்.