ஈரோடு மாவட்டம், ஆசனூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தங்களது சோதனைச் சாவடியில் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கோவை மாவட்டம், அவினாசி ரோடு, கஞ்சம்பள்ளி பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி (53) என்பதும், கர்நாடக மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர் கடத்தி வந்த ஒரு மது பாட்டில், ஒரு மது பாக்கெட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.