ஈரோடு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

1704பார்த்தது
ஈரோடு: கூலி தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியில் கடந்த 2.8.2020 அன்று தங்கராசு மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை முயற்சி செய்த வழக்கில், முருகன் குற்றவாளி என பவானி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஹரிஹரன் தீர்ப்பளித்தார். தங்கராசுவின் இடுப்புக்கு கீழ், வலது பக்கம், தோள்பட்டை ஆகிய இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் முருகன் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு, கொலை முயற்சி குற்றத்திற்காக பத்தாண்டு கால சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி