ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் வனப்பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மதியம் வரை வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தட்ட கரை வலைப்பகுதிக்கு உட்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில், தாமரைக் குளம் பகுதியில் நீல பைங்கிளி, பருந்து உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இந்த பணியில் 10க்கும் மேற்பட்ட குழுக்களாக வனத்துறையினர் பிரிந்து ஈடுபட்டனர்.