ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரவுண்டானா பகுதியில் இன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் தலைமையில் அந்தியூர் வார சந்தையில் மாடு இறக்கி கடை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டம் காலை 10 மணியிலிருந்து 2 மணி வரை நடைபெற்றது.