ஈரோடு: மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

826பார்த்தது
ஈரோடு: மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி
கர்நாடக மாநிலம் சென்னப்பட்டினம் பகுதியில் இருந்து ஆடுகளை ஏற்றிச் சென்ற லாரி, பர்கூர் மலைப்பாதை வழியாக ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தியூர் வரட்டு பள்ளம் அணை அருகே வந்தபோது, லாரி நிலைதடுமாறி மலைப்பாதையின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த சசிதர் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி