பவானியில் லாட்டரி விற்றவர் கைது

72பார்த்தது
பவானியில் லாட்டரி விற்றவர் கைது
ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பவானி போலீசார், குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அங்குள்ள மளிகைக் கடை முன்பு, லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (39) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டு, செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி