பர்கூர்: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

78பார்த்தது
பர்கூர்: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் தனிப்பிரிவு போலீசார் நேற்று (பிப்.7) வாகன சோதனை நடத்தினர். கர்நாடகாவில் இருந்து அந்தியூர் வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, தமிழக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை வைத்திருந்த செல்வராஜ் (33) என்பவரை பர்கூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி