சந்திய பாளையத்தில் மாசி தேரோட்டம்

2பார்த்தது
சந்திய பாளையத்தில் மாசி தேரோட்டம்
அந்தியூர் அருகே சந்திய பாளையத்தில் நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழாவில், காமாட்சியம்மன், நடராஜர், அங்காள பரமேஸ்வரி அம்மன் தெய்வங்கள் தேரில் அலங்கரிக்கப்பட்டு, மயான கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேட்டைக்கிடா காணிக்கை செலுத்தினர். அவை பலியிடப்பட்டு, கோவில் நிர்வாகத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னர், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், காட்டு பாளையம், சந்தியபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் கலந்துகொண்டனர். வெள்ளிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி