கருவேல மரங்களை அகற்ற மதிமுகவினர் கோரிக்கை

780பார்த்தது
கருவேல மரங்களை அகற்ற மதிமுகவினர் கோரிக்கை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட தோட்டக்குடியாம்பாளையம் கிராமத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியில் ஆக்கிரமித்துள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும், ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்தி மழைநீரைச் சேமிக்க மராமரத்துப் பணிகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சோ. வீரக்குமாரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், ஏரியின் மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி