ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்

637பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள்
அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, HAND IN HAND INDIA (JK Wonderland) என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், ரூ. 3 லட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ரத்த சர்க்கரை அளவைப் பார்க்கும் கருவி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, கர்ப்பப்பையில் உள்ள சிசு இதயத்துடிப்பு பரிசோதனை கருவி, எடை பார்க்கும் கருவி, காய்ச்சல் அளவைப் பார்க்கும் கருவி, உயரம் பார்க்கும் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் கருவி, மைக்ரோஸ்கோப் கருவி, மருத்துவ பயனாளிகள் அமரும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நாற்காலிகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள், 3 பக்கெட் கிளீனிங் சிஸ்டம் கருவிகள், செமி ஆட்டோ அனலைசர் கருவி மற்றும் ரத்தப் பரிசோதனைக்கு தேவையான பிற ஆய்வக உபகரணங்கள் ஆகியவை இதில் அடங்கும். இந்த உபகரணங்கள் அனைத்தும் மருத்துவ பயனாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில், அந்தியூர் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி