ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூரில், வேளாண்மைத் துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ராகி கொள்முதல் தொடர்பான விவசாயிகள் முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ராகி கொள்முதலை அதிகப்படுத்துவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. பர்கூர் மலைப் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் ராகிக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,888 வழங்கப்படும் என்றும், மூன்று நாட்களில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பர்கூர் கிராமத்தில் மூன்று இடங்களில் கூடுதலாக ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.