அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தாணி சாலையில் நகலூர் பிரிவு முதல் மினியப்பம்பாளையம் நலம் மஹால் வரை 600 மீட்டர் தூரத்திற்கு, 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்கான பூமி பூஜையை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவிப் பொறியாளர் பாபு சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.