ஈரோடு மாவட்டம் அந்தியூரில், 5 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்தை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் நேற்று இரவு ஆய்வு செய்தார். மின் விளக்குகள், மின்விசிறிகள், குடிநீர் வசதிகள் போதுமானதாக உள்ளதா என மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மருத்துவ அதிகாரி பிரகாஷ், மின்வாரியத்துறை அதிகாரி அங்கப்பன் மற்றும் மருத்துவர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.