பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மடிக்கணினி எம்எல்ஏ வழங்கினார்

1பார்த்தது
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மடிக்கணினி எம்எல்ஏ வழங்கினார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்துகொண்டு, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 419 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செந்தில் அரசு, கல்லூரி இயக்குனர் முத்துச்சாமி, ஒன்றிய கழக செயலாளர் நாகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி