நம்பியூர் அருகே பழைய அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி (63) பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஜீப் மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வரப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீப்பை ஓட்டிச் சென்ற த.வெ.க. உறுப்பினர் சத்தியபிரபு (43) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.