ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ளிமடை குட்டைப் பகுதியில் இன்று நான்கு தேசிய பறவையான மயில்கள் இறந்து கிடந்தன. அப்பகுதியில் கால்நடை மேய்ப்பவர்கள் அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அந்தியூர் வனத்துறை அதிகாரிகள் இறந்து போன மயில்களை கைப்பற்றி, அவை எவ்வாறு இறந்தன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மயில்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உள்ளனர்.