நிபந்தனை பட்டாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கினர்

669பார்த்தது
நிபந்தனை பட்டாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு வழங்கினர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தியூர் மற்றும் கோபி வருவாய் வட்டாரங்களில் வழங்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் நிபந்தனை பட்டாக்களின் நிபந்தனைகளை நீக்கிட கோரி, முதற்கட்டமாக அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் சென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை விவசாயிகளிடமிருந்து அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் இளஞ்செழியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்ப படிவுகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி