அந்தியூர் அருகே உள்ள அண்ணா மடுவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால், அந்தியூர், தவிட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், காட்டுப்பாளையம், பருவாச்சி, வெள்ளி திருப்பூர், எண்ணமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.