மதுபான கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு

59பார்த்தது
மதுபான கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை மனு
அம்மாபேட்டை அருகே மூணாம் சாவடி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை, பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அந்தியூர் தாசில்தார் இளஞ்செழியனிடம் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

தொடர்புடைய செய்தி