அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

1பார்த்தது
அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில், பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சரால் அம்ருத் 2.0 குடிநீர் அபிவிருத்தி திட்டம், அரசு மருத்துவமனை புதிய கட்டிடம், தவிட்டுப்பாளையம் மயானத்தில் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், செயல் அலுவலர் சதாசிவம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி