சாலை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

453பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், சாலையை கடக்கும்போது இருபுறமும் பார்த்து செல்ல வேண்டும், சிக்னல்களை கவனிக்க வேண்டும், மஞ்சள் கோடுகளை தாண்டி முந்தி செல்லக்கூடாது, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தவிட்டுப்பாளையம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்களும் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி