அந்தியூர் அருகே முனியனூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்மாபேட்டை - அந்தியூர் சாலையில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்து, கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றதால், காலை 10 மணி முதல் 10.30 மணி வரை அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.