அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் எண்ணமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டு, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். மனுக்கள் மீது துறை வாரியான அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.