தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது

3பார்த்தது
தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தவர் கைது
காவேரிபுரத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (45) என்பவர், கொளத்தூர் சென்னம்பட்டி சனி சந்தை அருகில் தனது இருசக்கர வாகனம் மூலம் மளிகை கடைகளுக்கு பீடி சிகரெட் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இன்று காலை திருப்பூர் தனிப்பிரிவு காவலர் ரோந்து சென்றபோது, அவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவர் குட்கா பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்ய வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 300 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மகாலிங்கம் கைது செய்யப்பட்டார்.