தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா

591பார்த்தது
தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆப்பக்கூடல் சக்தி நகரில் உள்ள சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்துகொண்டு 419 மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் செந்தில் அரசு தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குனர் கே ஆர் முத்துசாமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி