ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நடைபெற்ற விவசாய விளைபொருட்கள் ஏலத்தில், பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 180 மூட்டை துவரை சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று துவரையை ஏலம் எடுத்தனர்.