ஐயப்பன் மற்றும் கணபதி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா

63பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பன் மற்றும் கணபதி திருக்கோவில்களின் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி தேவேந்திரநகரில் அமைந்துள்ள பாபா திருக்கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கன்னிமூல கணபதி மற்றும் ஐயப்பன் திருக்கோயில்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் குருமந்தூர், நம்பியூர், கோபி, சிருவலூர், கொலப்பலூர், அளுக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். முக்கிய நிகழ்வாக குடமுழுக்கு விழா கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேலதாளங்களுடன் புனித நீரை எடுத்து திருக்கோவிலில் வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது, தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

 பாபா திருக்கோவிலின் நிறுவனர் பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவில் கோபிசட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.