திறக்காமல் மூடி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

0பார்த்தது
திறக்காமல் மூடி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
அந்தியூர் சட்டமன்ற அலுவலகம் தேர்தல் அறிவித்தவுடன் மூடப்பட்டு, புதிய சட்டமன்ற உறுப்பினர் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்ற பிறகும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், அந்தியூர், பர்கூர் மலைப்பகுதி, சென்னம்பட்டி, பி. மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அந்தியூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி