ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளி திருப்பூர் பகுதி குடுமுடி தோட்டம் பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி வெற்றிவேல் வீட்டில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். கிராம நிர்வாக அலுவலர் சேதங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.