ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலையத்தில் கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல மாதங்களாக சேகரிக்கப்பட்ட இந்த புகையிலை பொருட்களை, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலையில் நேற்று (மே 19) பர்கூர் மயான பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டி அவற்றில் போட்டு மூடப்பட்டு அழிக்கப்பட்டன.