அந்தியூர் அடுத்த கள்ளிமடைக்குட்டை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மையத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் கண்ணன் தலைமை வகித்தார். முகாமில், கால்நடைகளுக்கு குடல்புழு நீக்கம், ஆண்மை நீக்கல், தடுப்பூசி, சினை உள்ளிட்ட சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யப்பட்டது. கள்ளிமடைக்குட்டை, நஞ்சமடைக்குட்டை, பாலக்குட்டை, ஓடைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.