ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக உள்ள ஈஸ்வரனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன் விளக்கவுரை ஆற்றினார். நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் இதில் பங்கேற்றனர்.