அந்தியூர் அருகே கும்பரவாணி பழைய லைன் மாரியம்மன் கோவில் விவசாய தோட்டங்களில் ஒற்றை ஆண் யானை புகுந்து கதளி, செவ்வாழை வாழை மரங்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் வெளியேறும் யானை, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குமார், தங்கராசு, பவளக்கொடி, முனுசாமி ஆகியோரின் தோட்டங்களில் புகுந்து மரங்களை முறித்து சாப்பிட்டுள்ளது. தீப்பந்தம், பட்டாசு வெடித்து விரட்டியும் யானையை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். அகழி தோண்டவும், மின்வேலி அமைக்கவும் கோரிக்கை விடுத்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.