அம்மாபேட்டை அருகே முகாசி புதூர் பகுதியைச் சேர்ந்த 55 வயது கூலி தொழிலாளி மணி, குடிப்பழக்கம் மற்றும் தீராத வயிற்று வலியால் மனமுடைந்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.