அந்தியூர் அருகே தொழிலாளி பலி

78பார்த்தது
அந்தியூர் அருகே தொழிலாளி பலி
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சங்கராபாளையம், குருநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (48). தொழிலாளி. நேற்று (ஜூன் 6) அதிகாலை 4.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பர்கூர் -அந்தியூரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை கருப்பசாமி கோவில் அருகே ரோட்டோரம் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த தவசியப்பன் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தவசியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெள்ளிதிருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தவசியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வெள்ளிதிருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி