ஈரோடு மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயது கேசவன், டிப்ளமோ படித்து தனியார் பால் கம்பெனியில் வேலை செய்து வந்தார். காவலர் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று காலை வேலை முடிந்து வந்ததும் பாட்டி வீட்டிற்குச் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை ஜன்னல் வழியாகப் பார்த்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கேசவன் ஏற்கனவே இறந்துவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வெள்ளித்திருப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.