அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையத்தை சேர்ந்த பத்ரைய்யன் மகன் முருகேஷ், 21; இவருக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருந்ததால், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மது குடித்தால் உயிருக்கு ஆபத்து என டாக்டர்கள் அறிவுறுத்தியும், தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
இவரை பெற்றோர் கண்டித்ததால் கோபித்துக் கொண்டு, கடந்த 27ல் அந்தியூர் வந்தவர், அந்தியூர் தற்காலிக பஸ் ஸ்டாண்டில் களகை்கொல்லி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி முருகேஷ் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.