பவானி - Bhavani

கொடுமுடி: கழிவுநீா் கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கொடுமுடி: கழிவுநீா் கால்வாயில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கொடுமுடியை அடுத்த சின்னபையன்புதூரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி (64) சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கணபதிபாளையம் பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கழிவுநீா் கால்வாய்க்குள் விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கொடுமுடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து தகவலறிந்த கொடுமுடி போலீஸாா் கிருஷ்ணசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடியோஸ்


ஈரோடு