பவானி அருகே புதிதாக கட்டப்படும் வீட்டில் மின்ஒயர்கள் திருட்டு 2 பேர் சிக்கினர்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவர் ஜம்பை பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மின்சார ஒயர்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 4) அதிகாலையில் மர்மநபர்கள் 2 பேர் புதிதாக கட்டப்படும் வீட்டுக்குள் புகுந்து திருடிக்கொண்டு தப்பித்து ஓட முயன்றனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் பிடித்து பவானி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த, பால்ராஜ் (வயது 50), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.