ஈரோடு மாவட்டம் பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 216 பாக்கு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. பாக்கு காய் பச்சை கிலோ ரூ. 62.30, பாக்கு பழம் கிலோ ரூ. 73.30, பாக்கு காய் காய்ந்தது கிலோ ரூ. 26.30, சாளி பாக்கு கிலோ ரூ. 425 என ஏலம் விடப்பட்டது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 60 ஆயிரத்து 161-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, சேலம், திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த பாக்கு வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.